Tuesday, March 18, 2014

ஈரோடு - முனியாண்டி சாமி கோயில்

கிராம வழிபாட்டு முறைகள் மனிதர்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தை. இயற்கை வழிபாட்டின் ஒரு பரிமாணமாகவே கிராம வழிபாட்டு முறைகள் திகழ்கின்றன.

பன்னாரி அம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு பவளாவும் நானும் ஈரோட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் சாலையில் கண்களைக் கவரும் வண்ணம் ஒரு கோயில் தென்பட்டது. வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு ஓடிச் சென்று கோயிலில் சுவாமியையும் வணங்கி விட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தேன்.


இந்தக் கோயில், மக்கள் காலத்துக்கும் தமது தேவைக்கும் ஏற்ப சுவாமி வடிவங்களை உருவாக்கி வழிபாட்டில் இணைத்து வைக்கும் சமூகப்பரிணாமத்தைக் காட்டும் நல்லதொரு உதாரணம்.

அக்கோயிலின் சில படங்கள்.


முன்புறம்


முன்புறம் முனியாண்டி சாமி மேலும் சில விக்ரகங்கள்



மகுடி ஊதும் மனிதன், 2 மதுரை வீரன் சிலைகள், முனிவர் அருகில் முருகன் - வள்ளியாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.




சப்தமாதாக்கள்.. கிராமிய வழக்கில் இப்படி காட்சியளிக்கின்றனர்



சப்தமாதா சன்னிதி



முனியாண்டி சாமியின் திருவுருவங்கள் என்றே நினைக்கின்றேன். அருகில் காவலாளி வடிவில் இருவர் நிற்பதை பாருங்கள். ஆலய வழிபாட்டில் மக்கள் காணும் காட்சியை பிரதிபலிக்கும் அம்சங்களை கொஞ்சம் கொஞ்சமாக சமூக வழக்குகள் உள்வாங்கிக் கொள்வதை காட்டும் ஒரு உதாரணம்.




முனியாண்டி சாமி  வாகனம்





கோயில் கதவு பூட்டியிருக்கின்றது. கதவின் வர்ணமும் எளிய ஓவியங்களும்  அழகாக கண்களைக் கவர்வதாக இருக்கின்றன.



மகாலக்‌ஷ்மி, விஷ்ணு ஆகியோருடன் இணைந்த வேல்களுடன் காட்சி தருபவர் யார்? முருகன் ???

சுவாமிக்கும் ஊஞ்சல்கள்.. கோயிலின் முன்புறம்.



சுபா